Categories
தேசிய செய்திகள்

சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.10 லட்சம்…. அருமையான கடன் திட்டம்…. PNP செம அறிவிப்பு…!!!

கிராமப்புறங்களில் மகளிர் சுய உதவி குழுக்கள் தொடங்கப்பட்டு அதன் மூலமாக பெண்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக பல நிதி நிறுவனங்களும் வங்கிகளும் கடன் கொடுத்து வருகின்றனர். இவ்வாறு கிராமப்புறங்கள் மற்றும் பின்தங்கிய பகுதியில் வளர்ச்சிக்காக பல்வேறு சிறப்புத் திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுக்களுக்கு ஒரு லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது.

இதுகுறித்து வங்கியின் சார்பாக வெளியிட்டுள்ள பதிவில், “தேசிய ஊடக ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் கிராமங்களும் வளர்ச்சிப்பாதையில் நகரும். சுய உதவிக் குழுக்களுக்கு ஒரு லட்சத்திலிருந்து பத்து லட்சம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற விரும்பும் சுய உதவிக் குழுக்கள் கிராமப்புற மற்றும் பல பகுதிகளில் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

ஒரு குழுவில் 10 முதல் 15 உறுப்பினர்கள் குறைந்தபட்சம் இருக்கவேண்டும். அதில் குறைந்தபட்சமாக மாற்றுத்திறனாளிகள் 5 பேர் இருக்க வேண்டும். ஒவ்வொரு சுய உதவி குழுவுக்கும் 10,000 முதல் 15,000 ரூபாய் சுற்று நிதி. கடன் அளவு 5 முதல் 10 லட்சம் ரூபாய் .இந்த கடனுக்கான வட்டி வருடத்திற்கு 7% வசூலிக்கப்படுகிறது” என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |