வேலூரில் சுய தொழில் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு மானியம் வழங்கப்படுவதாக ஆட்சியர் கூறியுள்ளார்.
படித்த மற்றும் படிக்காத வேலைவாய்ப்பற்ற சுயதொழில் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் விதமாக பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தில் உற்பத்தி பிரிவிற்கு 50 லட்சம், சேவை மற்றும் வியாபாரத்திற்கு 20 லட்சம் என கடன் உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது.
உற்பத்தி பிரிவுக்கு 10 லட்சத்திற்கு மேற்பட்ட திட்டங்களும் சேவை பிரிவுக்கு ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட திட்டங்களுக்கும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும். இதில் விண்ணப்பிக்கும் பொதுபிரிவு தரப்பினருக்கு அதிகபட்சமாக 25 சதவீதமும் இதர பிரிவு விண்ணப்பிப்பவர்களுக்கு அதிகபட்சமாக 30% மானியம் வழங்கப்படுகின்றது என வேலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.