தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இயற்கை முறையில் தேனீக்களை வைத்து தேன் சேகரித்து சம்பாதித்து வருகிறார் ஒரு தொழிலாளி.
தேன் உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதுடன் மருத்துவ குணம் நிறைந்தது. இதனை மக்கள் மறந்து வரும் நிலையில் சாத்தான்குளத்தில் நகுலன் என்ற தொழிலாளி இயற்கை முறையில் தேன் சேகரிப்பு தொழிலில் ஈடுபட்டு உள்ளார். சொந்த ஊரான குமரி மாவட்டம் குளித்தலையில் இருந்து தேனிகளை கொண்டு வந்து இங்கு உள்ள தோட்டங்களில் வைத்துள்ளார்.
தேனீக்கள் அந்த தோட்டத்தில் உள்ள முருங்கை பூ, புளியம்பூ, வேப்பம்பூ உள்ளிட்ட பூக்களில் இருந்து தேனை எடுத்து வந்து செல்கின்றனர். மாதம் இருமுறை தேன் பெட்டிகளை எடுத்து தேனில் இயந்திரத்தில் வைத்து சுத்தமான தேன் எடுக்கப்படுகிறது. அதன் பிறகு மீண்டும் கூட்டிற்குள் வைத்து மறுபடியும் தேன் சேகரிக்க படுவதாக நகுலன் தெரிவித்துள்ளார்.