தொழில்வளம் பெருகுவதற்கான இணக்கச் சூழலை மேம்படுத்துவதிலும், அதன் மூலம் கட்டமைப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழக அரசு உறுதி கொண்டுள்ளது. அதன்படி சுயதொழில் புரிவதில் ஆர்வம் கொண்டோர் உதவி பெறத்தக்க மானியத்துடன் கூடிய கடன் உதவிதிட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
மத்திய அரசின் 60% நிதி பங்களிப்புடன் சுய தொழில் தொடங்க ஆர்வம் உடையவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊறுகாய் வற்றல் தயாரித்தல், இனிப்பு, கார வகைகள் மற்றும் தின்பண்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சுய தொழில் தொடங்கும் ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கிண்டியில் உள்ள சிட்கோ அலுவலகம் அல்லது 9003084478, 9444114723 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.