தமிழக மக்கள் தன்னை பாராட்டுவதாக ஸ்டாலின் கனவு உலகில் மிதப்பதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள எடப்பாடி பழனிச்சாமி, திராவிட மாடல் ஆட்சியின் வெப்பம் தாங்காமல் மக்கள் துடித்து வருகிறார்கள். முதல்வர் மு.க ஸ்டாலின் மக்கள தொலைபேசியில் தன்னை பாராட்டுவதாக தனக்குத்தானே சுய பெருமை பேசிக்கொள்கிறார். இவருடைய திருவாய் மலர்ந்த ஓரிரு வாரங்களில் அரங்கேற சில முக்கிய சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை இங்கே நான் தோலுரித்துக் காட்டுகிறேன். பிரபல தமிழ் நடிகர் நடத்தி வந்த Black Sheep என்ற youTube சேனலை ஆளும் கட்சியின் வாரிசு ஒருவர் வாங்கியதாக தெரிகிறது. அந்த சேனலின் சர்வர் அறையில் பாலாஜி என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
ஆனால், காவல்துறை இதுவரை நேரடியாக விசாரிக்கவில்லை. இச்சம்பவத்தில் தவறு இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உடனடியாக தண்டனை பெற்றுத்தர வேண்டும். போலீஸ் துறையை கையில் வைத்திருக்கும் CM ஸ்டாலினால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தெரியவில்லை. அரசு அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு சர்வாதிகாரிபோல செயல்படும் அவர், மக்கள் தன்னை பாராட்டுவதாக மணல் கோட்டை கட்டி வருகிறார். ஆனால், உண்மை என்ன என்பது தேர்தலில் தெரியும் என்று கூறினார்.