சென்னை சென்ட்ரலில் கட்டி முடிக்கப்பட்ட சுரங்க நடைபாதையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச்.30) திறந்து வைக்க இருகிறார். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பாக மத்திய சதுக்க திட்டத்தின் ஒரு பகுதியான சுரங்க நடைபாதையின் பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து திறப்பு விழா இன்று நடைபெற இருக்கிறது. அதாவது சென்னை மத்தியசதுக்கம், நிழல் தரக்கூடிய செடிகள், அழகிய செடிகள் மற்றும் நீரூற்றுகளுடன் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் 500 கார்கள், 1500 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு இடவசதிகள் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள மத்திய சதுக்கத்தில் சுரங்கப்பாதை வழியே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொதுமக்கள் சிரமம் இன்றி செல்லவும் வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு தினசரி தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் இருக்கிறது. மத்திய சதுக்கத்தின் வாயிலாக சென்ட்ரல் ரயில் நிலையத்தின் எழில் கூடுவதோடு, போக்குவரத்து நெரிசலையும் கட்டுப்படுத்தும் அடிப்படையில் நவீன கட்டமைப்புகளுடனும் அழகிய பூங்காங்களுடனும் மத்திய சதுக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.