தென்காசி மாவட்டம் சுரண்டை சிறப்பு நிலை பேரூராட்சியாக செயல்பட்டு வந்தது. இதனை தமிழக அரசு நகராட்சி ஆக உயர்த்தி உத்தரவிட்டு பூர்வாங்க பணிகள் நடந்து வந்தது. இந்த நகராட்சியின் முதல் ஆணையாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று பதவியேற்றுக்கொண்டார்.
இவர் இதற்கு முன்பு பேரூராட்சிகள் மண்டல இயக்குனர் அலுவலகத்தில் தலைமை எழுத்தாளராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், புதிய ஆணையாளராக லெனினுக்கு அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.