ஒவ்வொரு வருடமும் எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட பிரதமர் மோடி சென்று விடுவார். ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதிக்கு புறப்பட்டு சென்று ஆடல், பாடல், இனிப்புகள் என தீபாவளி களைக்கட்டும் அதுமட்டுமல்லாமல் ராணுவ வீரர்கள் மத்தியில் சிறப்புரையாற்றி அவர்களை உத்வேகப்படுத்துவார். அந்த வகையில் இந்த வருடமும் கார்கில் சென்று ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடியுள்ளார். எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களை சந்தித்து வணக்கம் சொல்லி கலந்துரையாடி பிரதமர் மோடி செல்பி எடுத்துக் கொண்டார். அதே சமயம் அவர்களுக்கு இனிப்புகளை ஊட்டியுள்ளார் இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதில் வட இந்திய மாநிலத்தைச் சேர்ந்த வீரர்கள் தாய் மண்ணே வணக்கம் என்ற தேசப்பற்று பாடலை ஹிந்தியில் பாடி இருக்கின்றனர். அப்போது கைகளை தட்டி பிரதமர் மோடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் அதன் பின் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் சுராங்கனி சுராங்கனி சுராங்கனி… சுராங்கனிக்க மாலுக்கெனவா.. மாலு மாலு மாலு சுராங்கனிக்க மாலு.. என்ற பாடலை பாடி தீபாவளியை கொண்டாடியுள்ளார். அப்போது அவர்களது வாய்நிறைய இனிப்புகளை ஊட்டி பிரதமர் மோடி மகிழ்ந்துள்ளார் அதன்பின் பாடலுக்கு ஏற்ப தாளமும் போட்டுள்ளார் வீரர்களுடன் தமிழில் கலந்துரையாடியதை பார்க்க முடியாது. இந்த நிலையில் இது தொடர்பான வீடியோக்கள் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ twitter பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது பலரும் ரீட்விட் செய்து வருகின்றனர்.