Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“சுருக்கு கம்பி வேலியில் சிக்கித் தவித்த புள்ளிமான்”…. வனத்துறையினர் மீட்டு சிகிச்சை…!!!!!

சுருக்கு கம்பி வேலியில் சிக்கி தவித்த புள்ளி மானை பொதுமக்கள் மீட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை அருகே இருக்கும் நெல்லுகுந்தி கிராமத்தையடுத்து வனப்பகுதி இருக்கின்றது. இங்கு புள்ளி மான்கள் அதிகளவு வாழ்ந்து வருகின்ற நிலையில் உணவு மற்றும் தண்ணீருக்காக புள்ளிமான் ஒன்று வெளியேறிய நிலையில் நெல்லுகுந்தி அருகே சென்ற பொழுது சுருக்கு கம்பி வேலியில் சிக்கி தவித்ததையடுத்து தெருநாய்கள் கூட்டம் கடித்து குதறி இருக்கின்றது.

இதனை பார்த்த கிராமமக்கள் புள்ளி மானை மீட்டு வன காவலருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து வனத்துறையின சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து புள்ளி மானை மீட்டு சிகிச்சைக்காக அய்யூர் வனப்பகுதிக்கு கொண்டு சென்றார்கள். பின் புள்ளிமான் குணமான பின்பு வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்திருக்கின்றனர்.

Categories

Tech |