நடிகை சிம்ரன் ஒரு துளி கூட மேக்கப் இல்லாமல் நரைத்த முடியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகை சிம்ரன் விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி கதாநாயகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் திருமணத்திற்குப் பின் சில காலம் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார் . பின்னர் திரிஷா இல்லனா நயன்தாரா, சீமராஜா, பேட்ட ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் .
New Monday, new week, new goals!#MondayMood #MondayMorning #MondayVibes #Mondays pic.twitter.com/wDqx8iPG1o
— Simran (@SimranbaggaOffc) December 7, 2020
தற்போது நடிகர் மாதவனுடன் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சிம்ரன் ஒரு துளி கூட மேக்கப் இல்லாமல் சுருங்கிய கண்ணத்துடனும், நரைத்த முடியுடனும் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து என்ன சிம்ரன் இப்படி ஆயிட்டீங்க! என கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.