கொரோனா விதிமுறைகளை மீறியதாக கூறி இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவருக்கும் பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி கொரோனா விதிமுறைகளை மீறி செயல்படுபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக கூறி இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மும்பையில் டிராகன் பிளை கிளப்பில் போலீசார் நடத்திய சோதனையில் ரெய்னா உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைவரின் மீதும் இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.