Categories
உலக செய்திகள்

சுறாவிடம் சிக்கிய மனைவி… கணவரின் போராட்டம்…!!!

ஆஸ்திரேலியாவில் கடற்கரையில் மனைவியை காப்பாற்ற சுறாவுடன் சண்டையிட்ட கணவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஆஸ்திரேலியா நியூ சவுத் வேல்ஸில் உள்ள போர்ட் மேக்வாரி என்ற கடற்கரையில் சாண்டெல்லா டாய்ல்(35), ஷெல்லி தம்பதியினர் கடற்கரை பகுதியில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தனர். அச்சமயத்தில் கடற்கரையில் உலாவிக் கொண்டிருக்கும்போது மூன்று மீட்டர் சுறா ஒன்றால் தம்பதியினர் தாக்கப்பட்டனர். சுறாவால் தாக்கப்பட்ட மனைவியை காப்பாற்றுவதற்கு, ஷெல்லி அதன்மீது குறித்து கத்தியால் அதனை குத்தி தனது மனைவியை காப்பாற்றி உள்ளார்.

பிறகு அவரின் மனைவிக்கு மருத்துவர்களால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரின் மனைவிக்கு காலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சம்பவத்திற்குப் பின்னர் அந்த கடற்கரைப்பகுதி மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மன தைரியத்துடன் போராடி சுறாவிடம் இருந்து மனைவியை மீட்ட கணவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |