இன்ஜினியர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செம்பத்திமேடு அம்மன் கோவில் தெருவில் இசக்கிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான சுகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மக்கள் தேசம் கட்சியின் மாநில இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தார். இந்நிலையில் சுகுமார் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து பயங்கர ஆயுதங்களுடன் கீழே இறங்கினார். இதனை பார்த்த சுகுமார் அச்சத்தில் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார்.
ஆனாலும் மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் சுகுமாரை சரமாரியாக வெட்டிக் விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் ரத்தவெள்ளத்தில் சுகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுகுமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.