Categories
தேசிய செய்திகள்

சுற்றுசூழல் ஆர்வலர் திஷாரவி…. இன்று ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்…!!

மத்திய அரசின் புதிய வேளாண் திட்டங்கள் எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு உலகம் முழுவதும் பிரபலங்கள் பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா “பிரைடேஸ் பார் பியூச்சர்” என்ற அமைப்பின் கிளையை இந்தியாவில் தொடங்கியவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி. விவசாய சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தை தூண்டும் டுவிட்டர் டூல்கிட்டை பகிர்ந்தது தொடர்பான வழக்கில் டெல்லி போலீஸ் அவரை கைது செய்து காவலில் வைத்தது. இந்நிலையில் அவருக்கு நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |