Categories
மாநில செய்திகள்

‘சுற்றுச்சூழல் நண்பன்’…. பள்ளி, கல்லூரிகளில் விரைவில் மஞ்சப்பை….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பள்ளி, கல்லூரிகளில் விரைவில் மஞ்சள் பை அறிமுகம் செய்யப்படும் என்று சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி’ சுற்றுச்சூழல் நண்பன்’ என்ற தலைப்பில் வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சென்னையில் சர்வதேச கருத்தரங்கு நடைபெற உள்ளது.

இதில் தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் அவர்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட உள்ளது. அதனை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும் மஞ்சப்பை வடிவமைப்பை மாற்ற சுற்றுச்சூழல் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது., விரைவில் பள்ளி கல்லூரிகளுக்கும் மஞ்சள் பை அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |