சாலையோரமாக இருக்கும் குப்பைகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி-மேட்டுப்பாளையம் பகுதியில் சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக வாகனங்கள் அனைத்தும் அரவேனு வழியாக செல்கிறது. இந்தப் பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிக அளவில் செல்கிறது. இதன் காரணமாக சாலைகளில் இருக்கும் குப்பைகளையும், புதர்களையும் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கால்வாய் அடைப்புகளை அகற்றுதல், காலி மது பாட்டில்களை சேகரித்தல், வீடுகளில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம்பிரித்து வாங்கி மறுசுழற்சி செய்தல் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பொதுமக்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும் என நகராட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.