Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சுற்றுலாவிற்கு சென்ற கர்பிணி பெண்… திடீரென ஏற்பட்ட விபரீதம்… போலீஸ் தீவிர விசாரணை…!!

சுற்றுலாவிற்கு சென்ற கர்பிணி பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்துள்ள எஸ்.பி.பட்டினம் பகுதியில் அப்துல் மஜீத் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு மெகர் நிஷா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ள நிலையில் தற்போது இரண்டாவதாக மெகர் நிஷா கர்பமடைந்துள்ளர். இந்நிலையில் 8 மாத கர்பிணியான இவர் கடந்த 25ஆம் தேதி உறவினர்களுடன் சுற்றுலாவிற்கு ஊட்டிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அங்குள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார். அப்போது 26ஆம் தேதி மெகர் நிஷாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு திடீரென உயிரிழந்துள்ளார்.

இதனைபார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்து அவரது உடலை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் எஸ்.பி.பட்டினத்திற்கு அழைத்து சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற எஸ்.பி. பட்டினம் காவல்துறையினர் மெகர் நிஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கர்பிணி பெண் திடீரென உயிரிழந்த  சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |