Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சுற்றுலாவிற்கு வந்தவர்கள்… எதிர்பாராமல் நடந்த விபரீதம்… வேளாங்கண்ணியில் சோகம்..!!

நாகபட்டினம் வேளாங்கண்ணியில் சுற்றுலாவிற்கு வந்தவர்களில் 2 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அம்பேத்கர் சிலம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு சரிதா என்ற மனைவியும், பரத் என்ற மகனும் உள்ளனர். சண்முகம் அவருடைய உறவினர் மகன் தீபக் மற்றும் அப்பகுதியில் வசித்து வரும் 12 பேரையும் அழைத்துக்கொண்டு நாகப்பட்டினத்தில் உள்ள வேளாங்கண்ணிக்கு சுற்றுலாவிற்காக வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சண்முகத்தின் மகன் பரத்தும், அவருடைய உறவினர் மகன் தீபக்கும் வேளாங்கண்ணி கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த ராட்சத அலையில் இரண்டு பேரும் சிக்கினர்.

அதில் கடலுக்குள் மூழ்கிய 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் கடலுக்குள் தேடி பார்த்தனர். ஆனால் பரத் மட்டுமே பிடிபட்டார். இதையடுத்து பரத்தை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து காவல்துறையினர் மற்றும் உறவினர்கள் தீபக்கை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் தீபக் உடல் கரை ஒதுங்கியது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் தீபக்கின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீழையூர் மற்றும் வேளாங்கண்ணி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |