Categories
மாநில செய்திகள்

சுற்றுலா ஆலோசனைக் குழு பெயர் மாற்றம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் சீரமைக்கப்பட்டு சுற்றுலா ஆலோசனை குழுவானது தமிழ்நாடு சுற்றுலா மேம்பாடு மற்றும் வளர்ச்சி குழு என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் “மறுசீரமைக்கப்பட்ட சுற்றுலா மேம்பாடு மற்றும் வளர்ச்சி குழுவின் துணைத் தலைவராக அரசு முதன்மை செயலாளரும், உறுப்பினர் செயலாளராக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குனரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி இந்திய சுற்றுலா முகவர்கள் சங்கம், இந்திய சுற்றுலா சேவை நிறுவன சங்கம், தமிழ்நாடு சுற்றுலா சந்தை, தென்னிந்திய ஹோட்டல்கள், உணவகங்கள், தமிழ்நாடு சுற்றுலா சுற்றுப்பயணம் விருந்தோம்பல் சங்கம் உள்ளிட்ட சுற்றுலாவை மையப்படுத்திய சங்கங்கள் இதில் இடம்பெற்றிருக்கும். இந்த சுற்றுலா மேம்பாட்டு மற்றும் வளர்ச்சிக்கான ஆலோசனைகளை வழங்கும் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டு ஆகும்” என்று தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |