அமெரிக்காவில் விர்ஜீனியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் வாஷிங்டனுக்கு சுற்றுலா சென்று விட்டு வந்து கொண்டிருந்தபோது மர்மன் அவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் நிலை மிக மோசமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் முன்னாள் கால்பந்து வீரர் என தெரியவந்துள்ளது. அதே சமயம் இந்த வருடத்தில் மட்டும் அமெரிக்காவில் 600 துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
Categories