விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நெகனூர் அரசு உயர்நிலை பள்ளியில் வேலை பார்க்கும் 13 ஆசிரியர்கள் அரையாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு மூணாறுக்கு ஒரு வேனில் சுற்றுலா சென்றுள்ளனர். இந்த வேனை சீனிவாசன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். நேற்று முன்தினம் பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் மூன்று ரோடு மேம்பாலத்தை கடந்து வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் சுமன், சரவணன், சந்திரலேகா, இந்திரா உட்பட 11 ஆசிரியர்கள் காயமடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்த ஆசிரியர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.