Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“சுற்றுலா சென்ற குடும்பம்” தடுப்பு சுவரின் மீது மோதிய வேன்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தடுப்பு சுவரின் மீது வேன் மோதிய விபத்தில் 2பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு   கடந்த 27-தேதி சென்னையை சேர்ந்த சம்பத்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் சுற்றுலா வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சம்பத்குமார் மீண்டும் ஊட்டியில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து  மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் 2-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன்  சாலை தடுப்பு சுவரின் மீது மோதி அருகில் இருந்த மரத்தின் மீது மோதியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வேனில் இருந்த அனைவரையும் மீட்டுள்ளனர். மேலும் படுகாயமடைந்த சங்கீதா, முருகேஷ் ஆகிய 2 பேரை  சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |