Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சுற்றுலா சென்ற நண்பர்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

கார் மீது மோட்டார் சைக்கிள்  மோதிய விபத்தில் நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள பெருங்குடி பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் காமராஜ் தனது நண்பரான அஜித் கண்ணன் உட்பட 18 பேருடன் சேர்ந்து பத்து மோட்டார் சைக்கிள்களை கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இவர்கள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்துவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து வத்தலக்குண்டு-நிலக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்த போது காமராஜ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளும் அவ்வழியாக வேகமாக வந்த காரும் நேருக்கு நேர் பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த காமராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் தூக்கி வீசப்பட்ட அஜித் கண்ணன் சாலையின் குறுக்கே சென்ற மின்கம்பி மீது பறந்து போய் விழுந்து விட்டார். இதனால் மின்சாரம் பாய்ந்து மின் கம்பியில் தொங்கியபடியே அஜித் கண்ணனும் உயிரிழந்துவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அஜித் கண்ணன் மற்றும் காமராஜ் ஆகியோரின் சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |