கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்த விபத்தில் மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 5 கல்லூரி மாணவர்கள் காரில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் ஊட்டி- தொட்டபெட்டா சாலையில் பைக்காரா நோக்கி சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் மாணவர்கள் உயிர் தப்பினர். ஆனால் கார் மிகவும் சேதமடைந்தது.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தினர். பின்னர் காயமடைந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.