கேரளாவில் பள்ளிகளில் இருந்து சுற்றுலாவிற்கு செல்ல கடும் நிபந்தனை விதித்து அம்மாநில பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுலா துறையால் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களை மட்டுமே சுற்றுலா செல்ல பள்ளிகள் பயன்படுத்த வேண்டும். இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பயணம் செய்ய அனுமதி கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பயணத்தின் விவரங்கள் குறித்து தலைமை ஆசிரியர்கள் அறிந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை போக்குவரத்து துறையின் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது