சுற்றுலா தலங்களுக்கு பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அது ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, மற்ற நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு என முக்கிய கட்டுப்பாடுகளை அறிவித்தது.
அதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டம் கொடைக்கானல் ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலா தலங்களுக்கும், உள்ளூர் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளுக்கும், அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. உயிரியல் பூங்காக்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அருங்காட்சியங்கள் என்று அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.