புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக புகழ் பெற்ற சித்தனவாசல் சுற்றுலா தலம் மூடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தற்போது இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமையன்று முழு நேர ஊரடங்கு மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான சுற்றுலாத் தலங்களுக்கும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற சித்தனவாசல் சுற்றுலா தலம் மூடப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலா தலத்திற்க்கு பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறைகள், பண்டிகை தினம் என்றாலே சுற்றுலா தலத்திலுள்ள குகை ஓவியங்கள், பூங்கா, படகு குளம், சமணர் படுக்கை உள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதும். தற்போது கொரோனா பரவல் எதிரொலியாக மூடப்பட்டுள்ளதால் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.