ஸ்பெயின் சுற்றுலா தளங்களுக்கு வரும் பயணிகள் கோவிட் சான்றிதழை காட்டினால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஸ்பெயினிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் சில தளர்வுககளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மெக்சிகோவில் நடந்த உலக சுற்றுலா கவுன்சில் மாநாட்டில் ஸ்பெயின் நாட்டில் சுற்றுலா தளங்கள் திறக்கப்படும் என அந்நாட்டின் சுற்றுலாத் துறை செயலாளர் பெர்னாண்டோ வால்டெஸ் அறிவிப்பு வெளியிட்டார்.
அழகிய சுற்றுலா பகுதிகளைக் கொண்ட ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றால் அனுமதி அளிக்காததை தொடர்ந்து பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த வரும் ஜூன் மாதம் முதல் அனைத்து சுற்றுலா பகுதிகளும் திறக்கப்படும் என்றும் அதில் அனைத்து நாட்டினரும் அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த நாட்டிலிருந்து வரும் பயணிகள் Covid certificate எனும் சுகாதார சான்றிதழ் காட்டினால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.