Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சுற்றுலா நிறுவனத்திடம் ஏமார்ந்த நபர்…. நீதிமன்றத்தில் வழக்கு…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

ஈரோடு கருங்கல் பாளையம் குமணன் வீதியில் வசித்து வருபவர் சங்கரசுப்பையா. இவர் சென்னையை சேர்ந்த வரசித்தியாத்ரா என்ற ஆன்மிக சுற்றுலா நிறுவனத்தின் விளம்பரத்தை ஒரு ஆன்மிக இதழில் பார்த்தார். அதில், காசி, கயா, புத்தகயா, திரிவேணி சங்கமம் ஆகிய ஆன்மிக தலங்களுக்கு 7 தினங்கள் சுற்றுலா அழைத்துச் செல்வதாகவும், ஒரு நபருக்கு வாகனம், தங்கும் செலவு என அனைத்தும் சேர்த்து ரூபாய் 3 ஆயிரத்து 20 செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. அதனை நம்பிய அவர், மனைவி, மகன் என 3 பேருக்கு முன் பதிவு செய்தார். இதற்குரிய தொகையாக 09/11/2019 அன்று ரூபாய் 9 ஆயிரத்து 60-ஐ செலுத்தினார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் 21/01/2020 தை அமாவாசை தினத்தில் புனித யாத்திரை அழைத்துச் செல்வதாக உறுதி அளித்தனர். ஆகவே குறிப்பிட்ட நாளில் சங்கர சுப்பையா புனித பயணத்துக்காக தயாராக இருந்தார். எனினும் அப்போது கூட்டம் அதிகமாக இருப்பதாக கூறி பயணத்தை அடுத்த மாதத்துக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் தள்ளிவைத்தது. இதேபோல் 3 மாதங்கள் பயணம் தள்ளிவைக்கப்பட்டது. ஆகையால் தாங்கள் செலுத்திய தொகையை திரும்ப வழங்க வேண்டும் என கேட்டார். அதன்படி அந்த நிறுவனம் ஒரு காசோலை வழங்கியது. அதனை வங்கியில் செலுத்தியபோது பணமில்லை என திரும்பி வந்தது.

இந்நிலையில்தான் அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். அதனைத் தொடர்ந்து சங்கர சுப்பையா ஈரோடு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் இதுகுறித்து வழக்கு தொடர்ந்தார். ஆணையத்தின் தலைவர் எஸ்.பூரணி, உறுப்பினர்கள் வி.பி.வேலுசாமி, எஸ்.வரதராஜபெருமாள் போன்றோர் விசாரணை மேற்கொண்டு தீர்ப்பளித்தனர். அவற்றில், குற்றம்சாட்டப்பட்ட சுற்றுலா நிறுவனம், பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடாக ரூபாய் 25 ஆயிரம் வழங்க வேண்டும். அத்துடன் வழக்கு செலவு தொகையாக ரூபாய் 5 ஆயிரம் மற்றும் அவர் செலுத்திய ரூபாய் 9 ஆயிரத்து 60-க்கு 9 % வட்டியுடன் வழங்க வேண்டும். இத்தொகைகளை 2 மாதத்துக்குள் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் தீர்ப்பில் கூறியிருந்தனர்.

Categories

Tech |