Categories
மாவட்ட செய்திகள்

சுற்றுலா பயணிகளின் காரில் இருந்த பணம், 4 செல்போன்கள்…. மர்ம நபர்களின் கைவரிசை…. பரபரப்பு….!!!!

தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களில் மர்ம நபர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் மர்ம நபர்களின் செயல் அதிகரித்து வருகிறது. மேலும் தான் வேலை செய்து வரும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் நல்லவர்கள் போல் நாடகமாடி சிலர் பணத்தை சுருட்டுவது அரங்கேறி வருகிறது. இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் காரில் இருந்த செல்போன் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாதலமாகவும், குமரியின் குற்றாலம் எனவும் திற்பரப்பு அருவி அழைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தினசரி நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருதைதந்து அருவில் ஆர்வத்துடன் குளித்து விட்டு செல்கின்றனர். நேற்று முன் தினம் மாலை திருவனந்தபுரத்திலிருந்து சுற்றுலா பயணிகள் சிலர் ஒரு காரில் திற்பரப்புக்கு வந்தனர். அவர்கள் தங்கள் பொருட்களை காரில் வைத்துவிட்டு அருவில் குளிக்கச்சென்றனர்.

இதையடுத்து அருவியில் குளித்துவிட்டு அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது, காரில் வைத்திருந்த 4 விலை உயர்ந்த செல்போன், ரூபாய்.10 ஆயிரம் போன்றவை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். யாரோ மர்ம நபர்கள் பணம் மற்றும் செல்போனை திருடிச்சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக சுற்றுலாபயணிகள் குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சென்ற 6 மாதங்களில் 4 திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளதால் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |