Categories
உலக செய்திகள்

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்…. இந்தியா-பூடான் எல்லை கதவுகள் மீண்டும் திறப்பு…. களை கட்டிய சுற்றுலா தளங்கள்….!!

பூட்டான் ஃபூன்ஷோலிங் மற்றும் பாரோ வழியாக மட்டுமே நுழைவு அனுமதிகளை வழங்கி இருந்தாலும் இப்போது கெலேபு , சம்ட்ரூப் மற்றும் ஜொங்கர் ஆகிய மூன்று கூடுதல் நுழைவு வாயில்கள் திறக்கப்படுகின்றது. 

அசாம் மாநிலத்தை ஒட்டிய பூடான் எல்லையில் சம்ட்ரூப் ஜோங்கர் மற்றும் கெலேபு பகுதிகளில் அமைந்துள்ள இந்தியா- பூடான் எல்லை நுழைவு வாயில்கள் கொரோனா நோய் தொற்றுக்கு பிறகு முதல் முறையாக இன்று திறக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளுக்காக பூடானில் சிறந்த கட்டமைப்பை ஏற்படுத்தும் வகையில் சுற்றுலா பயணிகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்று அண்மையில் பூடான் அறிவித்திருந்தது. இந்த நிதி மூலம் அந்நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்க்க வழிவகை செய்யவும் பூடான் அரசு திட்டமிட்டுள்ளது. பூடானின் உள்துறை மற்றும் கலாச்சாரத் துறையின் இயக்குனர் தாசி பென்ஜோர், அசாம் மாநிலத்தில் அமைந்துள்ள போடோலேண்ட் பிராந்திய கவுன்சில் அதிகாரிகளை கடந்த வாரம் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது அவர் கூறியதாவது, “கொரோனா நோய் தொற்று பாதிப்பிலிருந்து நாடு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இந்நிலையில் வர்த்தகம் அதிகாரிகளுக்கு இடையிலான போக்குவரத்து போன்ற காரணங்களுக்காக இந்தியா பூடான் எல்லை நுழைவு வாயில்கள் 23-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். மேலும் எல்லையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் வசிக்கும் இரு நாட்டு மக்களுக்கும் நேரடி தொடர்பு அவசியம் முன்பு ஃபூன்ஷோலிங் மற்றும் பாரோ ஆகிய இரு வாயில்கள் வலிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது சுற்றுலா பயணிகளுக்காக மூன்று புதிய வாயில்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு சேவை மற்றும் உள் கட்டமைப்பை மேம்படுத்த நிலைத்த மேம்பாட்டுக்கான நிதி என்னும் கட்டணம் வசூலிக்கப்படும். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன” என்றும் கூறியிருந்தார்.

Categories

Tech |