Categories
தேசிய செய்திகள்

சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இன்று முதல் ஏப்ரல் 16 ஆம் தேதி வரை…. மறந்துராதீங்க…..!!!

புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில் மூன்று நாட்களுக்கு கடற்கரை திருவிழா நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. சுற்றுலா நகரமாக திகழும் புதுச்சேரிக்கு தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். புதுச்சேரி கடற்கரை, ஆரோவில், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் மற்றும் சுண்ணாம்பாறு படகு குழாம் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கிறார்கள்.

மேலும் அனைத்து விதமான வெளிநாட்டு மதுவகைகள், உள்நாட்டு சாராயம் மற்றும் கல் ஆகியவையும் இங்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா காலகட்டத்தில் இழந்த வருவாயை மீட்டெடுக்க அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை கடற்கரை தனது சேவையை அறிமுகம் செய்துள்ளது. அதிலும் குறிப்பாக வம்பாகீர பாளையம், பாண்டி மெரினா கடற்கரை, புதுக்குப்பம் மணல் குண்டு கடற்கரை, வீராம்பட்டினம் ரூபி கடற்கரை மற்றும் சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை என கடற்கரைகள் மேம்படுத்தப்பட்ட சுற்றுலா வருவோரை புதுச்சேரியில் செலவிடும் நாட்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் சுற்றுலாத்துறை சார்பாக இன்று  முதல் ஏப்ரல் 16ஆம் தேதி வரை கடற்கரை திருவிழா நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதில் பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. மேலும் கடல்சார் விளையாட்டு, கடலுணவு விற்பனையும், மேலைநாட்டு இசை நிகழ்ச்சி, கருத்தரங்கு, கட்டுமர படகு போட்டிகள், மிதிவண்டி மாரத்தான்,அதிகாலை மீன் உணவு தேட நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நடைபெற உள்ளது.

Categories

Tech |