Categories
தேசிய செய்திகள்

சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் கிரெடிட் கார்டு…. இதில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?…. இதோ பாருங்க….!!!!

இந்தியாவின் தனியார் வங்கியான இன்டஸ் இண்ட் வங்கி, ஈஸிடைனர் நிறுவனமும் இணைந்து ஈசி ட்ரைனர் இண்டஸ் இண்ட் கிரெடிட் கார்டு என்ற புதிய கார் டை நேற்று முன்தினம் அறிமுகம் செய்தது. இந்த கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் டிரெயின் மெம்பர்ஷிப் இலவசமாக கிடைக்கும். இதன் மூலம் குறிப்பிட்ட உணவகங்களில் பில் கட்டணத்தில் 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.

அது மட்டுமல்லாமல் easydiner ஆப்பில் payeasyவழியாக ஒவ்வொரு முறையும் ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தும் போது உங்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும் என இண்டஸ் இண்ட் வங்கி அறிவித்துள்ளது. மேலும் இந்த ஆப் வழியாக கட்டணம் செலுத்தி ரிவார்ட் பாயிண்டுகளை உடனடியாக ரேடிங் செய்து கொள்ள முடியும். மேலும் காம்ப்ளிமென்ட்ரி ஸ்டே வவுச்சர் உள்ளிட்ட சலுகைகளையும் இதன் மூலம் பெறலாம்.

இந்த ரிவார்டு பாயிண்டுகளை வைத்து ஹோட்டல்களில் தங்கவும் உணவிற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் புதிய கார்டு வாங்குவோர் அனைவருக்கும் welcome bonus சலுகையாக 2000 பாயிண்டுகள் வழங்கப்படும். அதற்குப் பின்னர் ஒவ்வொரு முறையும் உணவு,பொழுதுபோக்கு மற்றும் ஷாப்பிங் ஆகியவற்றிற்கு செலவு செய்யும்போது 10 பாயிண்டுகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |