ஈரோடு மாவட்டம் கடத்தூர் கோபி அருகில் உள்ள கொடிவேரி தடுப்பு அணைக்கு சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள். அது மட்டுமில்லாமல் தங்கள் கொண்டு வரும் உணவுகளையும், அங்கு விற்கப்படும் மீன் வருவல்களையும் ருசித்து உற்சாகம் அடைவார்கள். அதனைத் தொடர்ந்து கொடிவேரி அணையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் அதிக மழை பெய்து வருவதால் கடந்த 1ஆம் தேதி சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று கொடிவரி அணையிலிருந்து வினாடிக்கு 1700 கன அடி தண்ணீர் வெளியேற்றியது. மேலும் இன்று ஆடிப்பெருக்கு அன்று கொடிவரி அணையில் ஆயிரம் கணக்கானோர் குவிவார்கள். அதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கொடிவேரி அணையில் குளிக்க பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளது. மேலும் நுழைவாயில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளனர்.