Categories
தேசிய செய்திகள்

சுற்றுலா பயணிகளே உஷார்…. இனி இதை யாரும் செய்யாதீங்க…. காவல்துறை திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

கொரோனா பரவலைத் தொடர்ந்து உலகம் முழுவதும் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கை பரவலாக அதிகரித்து வருகிறது.அதில் சில புள்ளி விவரங்களின்படி கடந்த ஆண்டு 2.7 கோடிக்கும் அதிகமானோர் ஆன்லைன் மோசடிகளுக்கு பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சுற்றுலா செல்லும்போது சமூக வலைத்தளங்களில் பயண விவரங்களை பகிர வேண்டாம் என சுற்றுலா பயணிகளுக்கு கேரளா காவல்துறை எச்சரித்துள்ளது.சுற்றுலா செல்லும் இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் பயண விவரங்களை புகைப்படங்களுடன் டேக் செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் இவ்வித பதிவு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் பயணத்தின் போது பொது மற்றும் இலவச வைபையை பயன்படுத்த வேண்டாம்.  மேலும் பயன்பாட்டில் இல்லாத போது ப்ளூடூத்தை ஆப் செய்ய வேண்டும் எனவும் அந்நியர்கள் வழங்கும் சார்ஜர்கள் மற்றும் பவர் பேங்க்களை பயன்படுத்த கூடாது எனவும் எனவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |