Categories
மாநில செய்திகள்

சுற்றுலா பயணிகளே உஷார்…. வண்டலூர் பூங்காவில் இதற்கு தடை…. வெளியான புதிய அறிவிப்பு…. !!!!

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு பல்வேறு முயற்சிகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகிறது. அதிலும் இந்திய பருவநிலை மாற்றம் குறித்து மிகத் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் மரம் நடும் பணி, பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித் துறை சார்பாக தொடங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அரசு சார்ந்த சுற்றுலா தலங்களில் தூய்மைக்கான கவனம் முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்று உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி வண்டலூர் பூங்காவில் சுற்றுலா பயணிகள் பயன்படுத்திய குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசுவதை தடுக்க கூடிய வகையில் ரூ.10 வைப்புத் தொகை செலுத்தும் புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது பார்வையாளர்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பாட்டில்களில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு ரூ.10 பெறப்படும். அங்குள்ள கடைகளில் ரூ.10 கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்கினாலும் அதில் ஸ்டிக்கர் ஒட்டி கூடுதலாக ரூ.10 முன்பணமாக பெற்றுக்கொள்ளப்படும்.

அதன்பிறகு சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் வரும்போது ஸ்டிக்கர் ஒட்டிய பிளாஸ்டிக் பாட்டிலை ஒப்படைத்துவிட்டு ரூ.10 வாங்கி கொள்ள வேண்டும். இந்த நடைமுறைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் இந்த ஆண்டு உலக சுற்றுலா தினம் ‘ஒரே ஒரு பூமி’ என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து உயிரியல் பூங்காவில் உள்ள 350 பணியாளர்களும் ஒரு மரத்தை நட வேண்டும். இந்த மரக்கன்றுகளை அந்த நபர்கள் தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வளர்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நிலையான மேலாண்மை நடைமுறையை நோக்கி பூங்காவில் இருக்கும் நீர் தொட்டியில் மீன் வளர்ப்பு முயற்சியும் அறிமுகப்பட்டுள்ளது. இந்த முயற்சி பூங்காவில் இருக்கும் நீர் பறவைகள் மற்றும் முதலைகளின் அன்றாடம் மின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமையும் என்று வண்டலூர் பூங்கா நிர்வாகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Categories

Tech |