கிழக்கு சீனாவின் ஷாங்காய் நகரில் உல்லாச பயண கப்பல் ஒன்றை வடிவமைக்கும் பணியில் சீனா தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. 341 மீட்டர் நீளமும், 37 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பயணக் கப்பல் சுமார் ஒரு லட்சத்து 42 ஆயிரம் டன் எடை கொண்டுள்ளது. முன்னதாக தயாரிக்கப்பட்ட சொகுசு கப்பலை விட அளவில் சற்று சிறியதாகவும் திறனில் சக்தி வாய்ந்ததாகவும் தயாரிக்கப்பட இருக்கின்றது. மேலும் சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் 2000க்கும் மேற்பட்ட அறைகளுடன் 16 மாடிகளை கொண்ட பிரம்மாண்ட கட்டிடம், உணவகங்கள், திரையரங்கு, சொகுசு அறைகள், நீச்சல் குளம் போன்றவை கட்டமைக்கப்பட இருக்கின்றது.
Categories