Categories
தேசிய செய்திகள்

சுற்றுலா பயணிகளை தடுக்க முடியாது …. ஹிமாச்சல் அரசு….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு சற்று கணிசமாக குறைந்து உள்ளதால் இமாச்சல பிரதேசத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதை சமூக வலைத்தளத்தில் பலர் தொடர்ந்து விமர்சித்து வந்தனர். இதற்கு பதிலளித்த ஹிமாச்சல முதலமைச்சர், ஊரடங்கு காலத்தில் சுற்றுலாத்துறை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் வருவதை தடுக்க முடியாது என்றும் இதற்கான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |