Categories
உலக செய்திகள்

விடுமுறையை கொண்டாட வந்தது தப்பா…? பிரிட்டன் மக்களுக்கு…. நேர்ந்த நிலை….!!

சுற்றுலா பயணிகளை தனிமைப்படுத்தியதால் இரவில் தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரிட்டனைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் தங்களது விடுமுறை நாட்களை மகிழ்ச்சியுடன் கழிப்பதற்காக சுவிட்சர்லாந்துக்கு சென்றுள்ளனர். ஆனால் சுற்றுலா சென்ற இடத்தில் ஸ்விஸ் பனிச்சறுக்கு ரிசார்ட் ஒன்றிற்கு சென்ற 420 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் ஏமாற்றமடைந்த மக்கள் சுமார் 200 பேர் நள்ளிரவில் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதனை Sonntagg zeintog என்ற உள்ளூர் பத்திரிகை தெரியப்படுத்தியுள்ளது. மேலும் சுவிஸ் பனிச்சறுக்கு ரிசார்ட்டுகள் பிரிட்டன் சுற்றுலா பயணிகளால் எப்போதும் நிறைந்து காணப்படும். ஆனால் தற்போது இங்கிலாந்தில் புதிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் விமான சேவை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தற்போது இந்த ரிசார்ட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பி வேலை செய்வோருக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் சுவிட்சர்லாந்தில் உள்ள வேர் பியர் என்ற கிராமத்திற்கு பிரிட்டன் மக்கள் சிலர் சென்றுள்ளனர். அவர்களில் சிலர் உடனடியாக பிரிட்டனுக்கு திரும்பிவிட்டனர். மீதமுள்ளவர்கள் அங்கு கட்டாய தனிமைப்படுத்துதலில் சிக்கி கொண்டுள்ளார்கள். மேலும் அவர்கள் ஒரு நாள் கழித்து யாரும் இல்லாத நேரத்தில் இரவில் தப்பியோடியுள்ளனர் என்று jean marc sandoz என்ற செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |