காஷ்மீருக்கு சென்றுவந்த சுற்றுலா பயணியின் சுட்டுரைப் பதிவுக்கு பிரதமர் நரேந்திரமோடி நெகிழ்ச்சியுடன் பதில் அளித்துள்ளார். அதுமட்டுமின்றி சுற்றுலா பயணியின் சுட்டுரைப்பதிவு உணர்வுப் பூர்வமாக தன்னை வசீகரித்ததாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார். அதாவது, ரஞ்சித்குமார் என்ற சுற்றுலாப்பயணி சென்ற சில மாதங்களுக்கு முன் காஷ்மீர் சென்று வந்துள்ளார்.
இதையடுத்து காஷ்மீரில் அவர் எடுத்த படங்களை சுட்டுரையில் பகிந்து இருக்கிறார். அந்த படங்களுடன் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, சென்ற மாதம் காஷ்மீர் பயணம் மேற்கொண்டு வந்தேன். பைசரான், ஆரு, கோகர் நாக், அச்பால், குல்மார்க், ஸ்ரீநகர் மிகவும் அழகான பகுதிகள் ஆகும். தால் ஏரியருகே சினார் வகையான பழமையான மரம் இருக்கிறது.
மக்களுக்கு அவற்றின் மீது தனிஈர்ப்பு இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இதை பிரதமர் நரேந்திரமோடி மறு பகிர்வு (Retweet) செய்து இருக்கிறார். அற்புதம், ஸ்ரீநகரில் சென்ற 2019ம் வருடம் பயணத்தின்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பகிர இப்பதிவு தூண்டுகிறது எனப் பதிவிட்டுள்ளார். சுற்றுலாப் பயணியின் நெகிழ்ச்சியான சுட்டுரைப்பதிவுக்கு பிரதமர் மோடி பதிலளித்து ஷேர் செய்தது இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.