துபாயில் கொரோனா பரவல் குறைவாக இருப்பதால் சுற்றுலாத்துறையின் பொது இயக்குனரான ஹிலால் சயீத் அல் மர்ரி, உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நகரம் துபாய் தான் என்று கூறியுள்ளார்.
கொரோனா பரவல் காலத்தில் சுற்றுலா துறை தொடர்பான வர்த்தகத்தை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து துபாய் விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் ஹோட்டலில் சந்தித்து கலந்து பேசி உள்ளனர். இந்த சந்திப்பில் சுற்றுலாத்துறையின் பொது இயக்குனர் ஹிலால் சயீத் அல் மர்ரி, உலகிலேயே மிகப் பாதுகாப்பான நகரமாக துபாய் திகழ்கிறது.
இங்கு விமானம் சேவைகளுக்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளும் ஓட்டல்களில் பாதுகாப்பான விதிமுறைகளை கடைபிடிக்கின்றனர். மேலும் இந்த கொரோனா கட்டுப்படுத்துவதற்காக அமீரகத்தில் தடுப்பூசி போடும் பணியானது வேகமாக தொடர்ந்து வருகின்றது. இதனால் தடுப்பூசி செலுத்தி வரும் உலக நாடுகளில் முதல் ஐந்து இடத்தில் அமீரகம் உள்ளது என்றும் கூறியுள்ளார் .
இந்த கூட்டத்தில் பங்கேற்ற துபாய் விமான நிலையங்களின் தலைமை செயல் அதிகாரி பால் கிரிப்த்ஸ், துபாய் விமான நிலையங்களில் பயணிகளுக்கு பாதுகாப்பு கருதி நிறைய விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் துபாயில் 80 நாடுகளின் 146 நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு 56 விமான நிறுவனங்கள் விமான சேவையை வழங்கி வருகிறதாக அவர் கூறியுள்ளார்.