Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொரோனாவின் 2 வது அலை வீச்சு…. முக்கொம்பு மேலணை சுற்றுலா தலம் மூடல்…. ஏமாற்றம் அடைந்த மக்கள்..!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள முக்கொம்பு சுற்றுலா தலம் மூடப்பட்டுள்ளதால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்பட்டதுடன் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி – கரூர் சாலையிலுள்ள முக்கொம்பு மேலணை சுற்றுலா தலம் மூடப்பட்டுள்ளது. இந்த பூங்காவிற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.

இதனையடுத்து சுற்றுலா தலம் மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். இதனால் முக்கொம்பு மேலணை சுற்றுலா தலம் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.

Categories

Tech |