Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சுற்றுலா வாகன நிறுத்த கட்டணத்திற்கு தற்காலிக தடை…. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!!

செங்கல்பட்டு மாமல்லபுரத்தில் பேரூராட்சி நிர்வாகம் சுற்றுலாவரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கிறது. கடற்கரை கோயில், ஐந்து ரதம் பகுதியில் வாகனங்களை நிறுத்த உள்ளூர் திட்ட குழுமம் தனியாக ஒரு கட்டணம் வசூலிக்கிறது. இவற்றில் ஏற்பட்ட குழப்பத்தால் வாகன நுழைவுகட்டணம் மற்றும் வாகன நிறுத்துமிட கட்டணம் என 2 கட்டணங்களையும் ஒன்றாக வசூலிக்க பேரூராட்சிக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனிடையில் 2 கட்டணங்களையும் ஒன்றாக வசூலித்து அதன் சதவீத அடிப்படையில் பேரூராட்சியும், உள்ளூர் திட்ட குழுமமும் சதவீத அடிப்படையில் பங்கிட்டு கொள்கிறது. இதற்காக வருடந்தோறும் பேரூராட்சி சார்பாக பொதுஏலம் நடத்தி ஒரே கட்டணமாக வசூலிக்க தனியாருக்கு ஒராண்டு உரிமம் வழங்கப்பட்டு வந்தது. நடப்பு வருடத்துக்கான பொது ஏலம் மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் சென்ற 17-ஆம் தேதி நடத்தப்பட்டது.

அப்போது வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அடுத்த வருடம் மார்ச் 31-ம் தேதி வரை 7 மாதத்துக்கு சுற்றுலா வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க அதிகபட்ச தொகையாக ரூபாய்.94 லட்சத்துக்கு 2வது வார்டு பேரூராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் சீனிவாசன் ஏலம் எடுத்தார். இந்நிலையில் அண்மையில் காஞ்சீபுரத்தில் நடைபெற்ற நகராட்சி நிர்வாக மண்டல கூட்டத்தில் பங்கேற்ற நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, சிறு, குறு தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் போன்றோரிடம் மாமல்லபுரத்தில் சுற்றுலா வாகனங்களுக்கு ஒரே கட்டணமாக வசூலிக்காமல் விதிகளை மீறி பலமுனை கட்டணம் வசூலிப்பதால் சுற்றுலா பயணிகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, அதை முறைபடுத்த வேண்டும் என்று திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி கோரிக்கை விடுத்து இருஅமைச்சர்களிடமும் புகார் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு, நுழைவுகட்டண ஏலத்தை நிறுத்தி வைக்கவும், வாகன கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்திவைக்கவும் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி இருக்கிறார். அத்துடன் கட்டணம் வசூலிப்பதற்கு ஏலம்எடுத்த ஏலதாரர் மறு அறிவிப்பு வரும் வரையிலும், செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் வாகன நுழைவு கட்டணம் வசூலிக்கவும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏலதாரர் சீனிவாசன் சென்ற 17-ஆம் தேதி பொது ஏலம் முடிந்து மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலரின் வங்கிகணக்கில் அன்று மாலையே ரூபாய்.94 லட்சம் செலுத்தப்பட்டு இருப்பதாகவும், பேரூராட்சிகளின் சட்ட திட்டப்படி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் வாகன நுழைவு கட்டணம் வசூலிக்க தனக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் பேரூராட்சிக்கு ஒரு புறம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பொதுஏல அறிவிப்பின்படி 1-ஆம் தேதி முதல் நுழைவுக்கட்டணம் வசூலிக்க தனக்கு அனுமதி வழங்க வேண்டும் அல்லது நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்து அதன் வாயிலாக கட்டணம் வசூலிக்க அனுமதி பெற இருப்பதாக ஏலதாரர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |