Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சுற்றுலா வேன்- 4 கார்கள் அடுத்தடுத்து மோதல்…. டாக்டர் உள்பட 10 பேர் காயம்…. கோர விபத்து…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பாச்சலில் தனியார் கல்லூரி முன்பு இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு கார்கள் மற்றும் ஒரு சுற்றுலா வெண் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுற்றுலா வானில் பயணம் செய்த டாக்டர் நவீன் குமார், அவரது மனைவி அருணாழ் தீபிகா, பிரபுதேவாழ் ராஜம்மாள், விஜயா, மீனா உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த 10 பேரையும் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காயமடைந்தவர்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள கோரிப்பாளையம் பகுதியில் இருக்கும் அப்பார்ட்மெண்டில் வசிப்பவர்கள் என்பதும், தஞ்சாவூரில் இருக்கும் புகழ் பெற்ற கோவிலுக்கு சென்ற போது விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கார் ஓட்டுனர் தனசேகரன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |