Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சுற்று சுவர் கட்ட கூடாது” எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்…. சேலம் பஜாரில் பரபரப்பு…!!

சேலம் லீ பஜாரில் சுற்றுச் சுவர் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், அரிசிபாளையம் பகுதியில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் வர்த்தக சங்கம் “லீ பஜார்” என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்த வர்த்தக மையத்திற்கு அருகில் பாவேந்தர் தெருவில் சுமார் 200 -க்கும் அதிகமான குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர். இதற்கிடையில் லீ பஜாரில் 2 ஏக்கர் நிலம் ஹவுசிங் போர்டுக்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அந்த நிலத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதற்கிடையில் சென்னை ஐகோர்ட்டில் அனுமதி பெற்று வர்த்தக சங்கத்தினர் நேற்று காலியாக இருந்த அந்த இடத்தில் சுற்றுச்சுவரை கட்ட நடவடிக்கை எடுத்தனர். உடனே அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனையடுத்து அங்கு போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன், பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் அங்கு  குவிந்தனர்.

அதன் பின்னர் காவல்துறையினர் பொதுமக்களிடம் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று சுற்றுசுவர் கட்டுகிறார்கள். எனவே உங்களது கோரிக்கையை உயர் அதிகாரிகளை சந்தித்து கூறுங்கள்  என தெரிவித்தனர். அதன்பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |