பிளிப்கார்டில் இ-காமர்ஸ் மளிகை சேவைக்கு மக்களிடம் அதிக வரவேற்பு பெற்றதால் மளிகை பொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
ஆன்லைன் ஷாப்பிங் கொரோனாவின் காரணத்தால் அசுர வளர்ச்சி அடைந்தது. இதனால் மக்கள் வீட்டிலிருந்தபடியே பொருள்களை வாங்குவதற்கு பழகிக் கொண்டனர். இதில் பிளிப்கார்ட்டில் இ-காமர்ஸ் வலைதளங்களிலும் மளிகை சாமான்களை மக்கள் வாங்க தொடங்கினர். பிளிப்கார்ட்டில் அதிக சலுகைகள் வழங்குவதால் மக்கள் பொருள்களை வாங்க விரும்புகின்றனர். இங்கு மொத்தமாக சாமான்கள் வாங்கினால் நமக்கு லாபம் கூட இதனால் சேமிக்கவும் முடியும் என்பது மக்களின் கருத்தாக உள்ளது.
இந்நிலையில் எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் மளிகை பொருள் இ-காமர்ஸ் மூலமாக விற்றதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு இகாமர்ஸ் மளிகை விற்பனைக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் பெங்களூரில் ஆர்டர் செய்த பொருள் 90 நிமிடத்தில் கிடைப்பதற்கு பிளிப்கார்ட்டில் ஹைப்பர் லோக்கல் திட்டமான ஃபிலிப்கார்ட் குயிக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கொல்கத்தா, புனே, பெங்களூரு, சண்டிகர் அஹமதாபாத், ஜெய்ப்பூர், மைசூர் போன்ற 50 நகரங்களில் இந்த இ-காமர்ஸ் சேவை உள்ளது. இதனை விரிவுபடுத்த பிலிப்காட் அடுத்த 6 மாதங்களுக்குள் 70 நகரங்களில் இந்த இ-காமர்ஸ் டெலிவரி சேவையை தொடங்கவிருக்கிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.