Categories
விளையாட்டு

‘சுலபமான கேட்ச்’…. தவற விட்ட வீரர்….. கோபத்தில் பந்தை எட்டி உதைத்து திட்டிய ரோகித் சர்மா….!!!!

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது. இந்நிலையில் அடுத்து இரண்டாவது போட்டி துவங்கியுள்ளது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற வாய்ப்பு இருக்கும், இந்த நெருக்கடியில் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியுள்ளது. இப் போட்டியில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில்186/5 ரன்களை சேர்த்து அசத்தியது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் முதல் வரிசை வீரர்கள் சொதப்பிய நிலையில், மிடில் வரிசை வீரர்கள் சிறப்பாக விளையாடியதால் இந்திய பவுலர்களுக்கு கடினமாக இருந்தது. மேலும் இலங்கை துரத்தி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் ஓப்பனர்கள் பிரெண்டன் கிங் 22 (30), கைல் மேய்ர்ஸ் 9 (10) ஆகியோர்  பெரிய ஸ்கோர் எதுவும் அடிக்கவில்லை. இதன் காரணமாக ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இருவரும் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்ததால் அந்த அணி 15 ஓவர்களில் 124/2 ரன்களை எடுத்து அசத்தியது. அடுத்த ஓவரை வீச புவனேஷ் குமார் வந்தார். அப்போது அவரின் 5வது பந்தை 38 ரன்கள் அடித்து ரோமன் பவுல் எதிர்கொண்ட நிலையில் அது டாப் ஹிட்ஸ் ஆனது. மேலும் புவனேஷ் குமார் அந்த பந்தை பிடிக்க முற்பட்டார். அவர் பிடித்து ஆட்டத்தின் போக்கை மாற்றி இந்தியாவின் வாய்ப்பை உறுதி செய்வார் என கருதப்பட்டது. ஆனால் அவர் சுலபமாக அந்தக் பந்தை தவறவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அந்த கேட்சை  தவிர விட்டதும் கேப்டன் ரோஹித் அந்த பந்தை எட்டி உதைத்து விட்டு புவனேஷ் குமாரை பார்த்து ஏதோ சொல்லியிருக்கிறார்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி பவுண்டரி அடித்து அணியை வெற்றி பாதையை நோக்கி அழைத்து சென்றார். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் பூரன் 62 (41) புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்துள்ளார். அடுத்து, ரௌமேன் பௌல் 68 (36), பொல்லார்ட்  ஆகியோர் களத்தில் இருந்த நிலையில், கடைசி ஓவரில் 25 ரன்களை எடுக்க முடியாமல், 16 ரன்களை (1,1,6,6,1,1) மட்டும் எடுத்து, 8 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தோல்வியைச் சந்தித்துள்ளது. கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸர்களையும் பௌல் தான் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி முடிந்தப் பிறகு கேட்சை தவறவிட்டது பற்றி  ரோஹித் ஷர்மா பேசினார். அதில், “நாங்கள் பீல்டிங்கில் படுமோசமாக சொதப்பினோம். கேட்சை பிடித்திருந்தால், ஆட்டத்தின் போக்கே மாறியிருக்கும். இதில் நாங்கள் கவனம் செலுத்தி, இனி இதேபோல் தவறு நிகழாமல் பார்த்துக்கொள்வோம்” என் கூறினார்.

Categories

Tech |