பிரெட் ஆம்லெட் செய்ய தேவையான பொருட்கள்:
முட்டை – 4,
பிரட் துண்டுகள் – 4,
பால் – 50ml,
சர்க்கரை – 1 டீஸ்பூன்,
வெண்ணை – 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவிற்கு.
செய்முறை:
முதலில் ஒரு சிறிய பௌலில் நான்கு முட்டைகளை உடைத்து ஊற்றிக் கொள்ளவும். முட்டைக்கு தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பின்பு அதனுடன் காய்ச்சி ஆற வைத்த பாலை ஊற்றிக் கலந்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு முட்டைக் கலவையை லேசாக ஊற்றி, அதன் மீது பிரட் ஸ்லைஸ்களை வைத்து, அதற்கு மேலே மீதமிருக்கும் கலவையில் முக்கால்வாசி பங்கை ஊற்றிவிடவும்.
அதனை 10 நிமிடத்திற்கு அப்படியே விட்டு, முட்டையுடன் அந்த பிரட் நன்றாக ஊறியப்பின், அதை தவா அல்லது தோசைக்கல்லில் சிறிதளவு வெண்ணெய் விட்டு பிரட் துண்டுகளை போட்டு நன்கு வேகவிடவும்.
தொடர்ந்து மீதமிருக்கும் முட்டை கலவையை பிரெட்டின் மேல் லேசாக ஊற்றி விடவும். பின் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
இதனை காலையில் மட்டும் அல்ல, விரும்பினால் ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக கூட கொடுத்து அனைவரையும் அசத்தலாம். சூடாக சாப்பிடும் பொழுது நான்கைந்து பிரெட்டுகள் கூட வயிற்றுக்குள் இறங்கிவிடும்.