முத்தையா முரளிதரன் நெஞ்சு வலியின் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார்.
இலங்கை கிரிக்கெட் வீரர் அணியின் முன்னாள் வீரரும், சுழற்பந்து வீச்சு ஜாம்பவானும் ஆன முத்தையா முரளிதரன் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியது. தற்போது ஐபிஎலில் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக முரளிதரன் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு அணி, ஹைதராபாத்அணிகள் சார்பில் விளையாடியுள்ளார்.
நேற்று முத்தையா முரளிதரன் தனது 48வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு இரவு 10 மணி அளவில் கொண்டுவரப்பட்டார். இந்நிலையில் இலங்கை அணியின் முத்தையா முரளிதரன் இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார். இருதய சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முரளிதரனுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார்.