தண்ணீரில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ்(15) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ் நண்பர்களுடன் இணைந்து அப்பகுதியில் இருக்கும் தென்பெண்ணை ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக சூழலில் சிக்கி தினேஷ் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாறை இடுக்கில் சிக்கியிருந்த தினேஷின் உடலை மீட்டனர். அதன்பிறகு தினேஷின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.